மேற்கு வங்கத்தில் அதிரடி!...பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!...சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் உள்ள கே.ஜி.கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மருத்துவர், கடந்த 9ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்ட சபைக் கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தாக்கல் செய்து மம்தா பானர்ஜி பேசினார்.

அப்போது, புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளதாவும், புகார்களை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க மசோதா வழிவகுக்கிறது என்று கூறினார். மேலும் பாலியல் வன்கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரானவை என்று கூறிய மம்தா பானர்ஜி, பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்ற ஷரத்து இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையயடுத்து இந்த மசோதா சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் உயிரிழக்கும் பட்சத்தில் இந்த உச்சபட்ச தண்டனை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் என்றும், இதுமட்டும் இன்றி பாலியல் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை விதிக்கவும், மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா கவனருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தெரிவித்த அவர், கவர்னர் ஒப்புதல் அளித்தால் இந்த மசோதா சட்டமாகும் என்று கூறினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action in West Bengal Death sentence for sex offenders Bill passed in Assembly


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->