மல்யுத்த வீரர்களுக்கு இறுதிச்சுற்று பட நடிகை ஆதரவு..!! - Seithipunal
Seithipunal


பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, கடந்த மாதம் முதல் டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று திடீரென தாங்கள் ஒலிம்பிக் உள்பட பல போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசுவோம் என்று மல்யுத்த வீரர்கள் ஐரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒலிம்பிக், காமன் வெல்த் போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசி எறிய முடிவு செய்தது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சாக்ஷி மாலிக், "சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற போது தம் வீட்டு மகள்கள் என அழைத்த பிரதமர் மோடி, இப்போது எங்களின் போராட்டத்தைப் பற்றி கவலைப்படவில்லை.

ஒரு பெண்ணாக இருந்தும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வீராங்கனைகள் போராட்டம் பற்றி குடியரசுத் தலைவருக்கும் கவலை இல்லை. நீதி கேட்டுப் போராடும் எங்களைப் பற்றி கவலைப்படாத பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் பதக்கங்களை தர விரும்பவில்லை" என்று தெரிவித்தார். 

இந்த நிலையில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு குத்துச்சண்டை வீராங்கனையும் நடிகையுமான ரித்திகா சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மல்யுத்த வீராங்கனைகளை நடத்தும் விதம் வருத்தம் அளிக்கிறது, வெட்ககரமானது.

அவர்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாதது மனிதநேயமற்ற செயல். உலக அளவில் இந்தியாவின் பெருமிதத்தை உயர்த்திய வீராங்களுக்கு ஆதரவாக இருப்போம். மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress ritika singh supports wrestlers protest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->