கல்வியை போல் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு தேவை! அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பணி தேர்வுக்கான அகில இந்திய அளவில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 450 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு அகில இந்திய அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வில் புதுச்சேரியை சார்ந்த போட்டியாளர்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவமனை பயிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 26.5% இட ஒதுக்கீடு வழங்குவது போல வேலையிலும் 26.5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ஜிப்மர் நிர்வாகத்தை வலியுறுத்தி புதுச்சேரி அதிமுக சார்பில் மாநிலச் செயலாளர் அன்பழகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த 500 மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk protest for Reservation is needed in employment as in education


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->