சிறுமிக்கு நீதிமன்றத்தில் வெற்றி: செல்லமாக வளர்த்த ஆடு இறப்புக்கு ரூ.2 கோடி இழப்பீடு! - Seithipunal
Seithipunal


கலிபோர்னியா, அமெரிக்கா: கலிபோர்னியாவில், 11 வயது சிறுமி தனது செல்லமாக வளர்த்திருந்த ஆடின் இழப்புக்காக நீதிமன்றத்தில் சாதனையுடன் வெற்றி பெற்றுள்ளார். விவசாய மற்றும் சமூகப் பயிற்சிகளை வழங்கும் ஒரு திட்டத்தின் கீழ், அந்த ஆடு சிறுமிக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதன்படி, அந்த ஆட்டை ஏலத்தில் விற்பனை செய்து, பரிசு வழங்கும் விதி இருந்தது. 

ஆனால், சிறுமி தனது செல்லம் போல வளர்த்திருந்த ஆட்டை ஏலத்திற்கு விட மனமில்லாமல், அதன் பிரிவால் மிகவும் துயரமடைந்தாள். அன்றைய தினம், ஏலத்திற்கு கொடுத்தபோது, அவள் மேஜையின் கீழ் படுத்து கதறி அழுதபோது, பெற்றோர்களால் கூட அவளை ஆறுதல் கூற முடியவில்லை.  

சிறுமியின் பெற்றோர், ஏலத்தில் கிடைத்த தொகையை திருப்பி கொடுத்து ஆட்டை மீண்டும் வாங்க முயன்ற போதும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. மேலும், அந்த ஆடு பலியிடப்பட்டதை அறிந்த சிறுமி மற்றும் அவரது குடும்பம் அதிர்ச்சியடைந்தனர். 

இவ்வாறு பல ஆண்டு நீடித்த நீதிமன்ற வழக்கில், சிறுமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டு, பலியான ஆட்டிற்காக ரூ.2 கோடி (3 லட்சம் அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நெகிழ்ச்சி உணர்வு மிக்க சம்பவம் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Victory for the girl in court Rs 2 crore compensation for the death of a pet goat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->