அதானி மீதான அமெரிக்க புகார் : ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் கோடி இழந்தது எல்.ஐ.சி! - Seithipunal
Seithipunal


தொழிலதிபர் கவுதம் அதானி, தங்கள் நாட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது, தொழில் துறையில் தற்போது மீண்டும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ள நிலையில், அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றுஅதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டால், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளான அதானி எண்டர்பிரைசஸ் 19 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 15 சதவீதமும் சரிவை சந்தித்துள்ளன.  குறிப்பாக, அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் எல்.ஐ.சி.க்கு ரூ.12 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மேலும்,  ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ, இண்டஸ்இண்ட், ஐ.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள், அதானி குழுமத்துக்கு கடன் வழங்கி உள்ள நிலையில் இதன் பங்கு விலையும் கடும் சரிவை சந்தித்து வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American complaint against adani lic lost rupees 12 thousand crore in a single day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->