காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் எப்போது அமல் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு.!
empty liquor bottle return scheme in tamilnadu by coming april 2025
மதுபானக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கொண்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, பெரம்பலூர், நீலகிரி, கோவை, திருவாரூர், நாகை, தேனி, தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுபானக் கடைகளில், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் மதுபானக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், வரும் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த திட்டம் மூலம் அரசுக்கு இதுவரை 45 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த திட்டம் காரணமாக மதுபான பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் பணிச்சுமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
English Summary
empty liquor bottle return scheme in tamilnadu by coming april 2025