நீதி வெல்லும்.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.. மல்யுத்த வீரர்ளுக்கு அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!! - Seithipunal
Seithipunal


இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தைத் தொடங்கினர். இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாத நிலையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலுக்குப் பின்னரே போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் பாஜக எம்.பி பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு விவசாயிகளும் ஆதரவு தெரிவித்தனர். சமீபத்தில் புதிய நாடாளுமன்றம் திறந்த போது அங்கே சென்று போராட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி இன்று டெல்லி எல்லைகள் மூடப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில் அடுத்தகட்ட போராட்டமாக தாங்கள் வென்ற அனைத்து மதங்களையும் கங்கையில் வீச உள்ளதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். இதற்காக அவர்கள் தங்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச தொடர்களில் வென்ற பதங்களுடன் ஹரித்துவாருக்கு வந்துள்ளனர். அங்கே கங்கை நதியில் பதங்களை விட உள்ள நிலையில் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்திய மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கை நதியில் மூழ்கடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நீதி வெல்லும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbumani requested wrestlers not to immerse the medals


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->