நெருங்கும் மக்களவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி கிளப்பிய அண்ணாமலை.!
Annamalai visit Delhi bjp candidates list
தமிழகத்தில் வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையிலான கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பா. ஜனதா சார்பில் போட்டியிட வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர் பட்டியல் உடன் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருப்பதாவது, இன்று பா.ஜ.க மாநில தேர்தல் குழு டெல்லி செல்கிறது.
![](https://img.seithipunal.com/media/BJP a.png)
39 தொகுதிகளிலும் பா.ஜ.க போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் கருதுகின்றனர். பொதுமக்கள் கருத்துக்களை தேசிய தலைமை இடம் தெரிவிக்க உள்ளோம்.
39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பமான அளித்துள்ளனர். உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை.
39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai visit Delhi bjp candidates list