சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal



சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 10 லட்சமாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிர படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகள் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் சீனாவில் இருந்து ஆக்ராவிற்கு வந்தவருக்கு பரிசோதனை செய்ததில் புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டுள்ளார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another Indian affected covid BF7 Variant in Agra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->