108 அடி நீள ஊதுபத்தி, 2,100 கிலோவில் மணி - ராமர் கோவிலுக்கு குவியும் காணிக்கைகள்.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள, அயோத்தியில் வருகிற 22ம் தேதி, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறுகிறது. உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாட்டு விருந்தினர்கள், இந்திய முக்கிய விருந்தினர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்கள் விதவிதமான காணிக்கைகளை ராமர் கோயிலுக்கு அனுப்பத் துவங்கியுள்ளனர். அதன்படி, 2,100 கிலோ எடையுள்ள மணி, 108 அடி நீள ஊதுபத்தி, 1,100 கிலோ எடையுள்ள மாபெரும் விளக்கு, தங்க காலணிகள், 10 அடியில் பூட்டு மற்றும் சாவி, ஒரே சமயத்தில் எட்டு நாடுகளின் நேரத்தைக் காண்பிக்கும் வித்தியாசமான கடிகாரம் என்று காணிக்கை பொருள்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அதன் படி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள இடாவிலிருந்து, 8 உலோகங்களின் கலவைகளைக் கொண்டு, 2,100 கிலோ எடையில் பிரம்மாண்ட மணி உருவாக்கப்பட்டு அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல், குஜராத்தின் வதோதராவிலிருந்து 108 அடி நீளத்தில் ஊதுபத்தி, காணிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள், பூஜை பொருள்கள் என்று பல்வேறு மதிப்புமிக்க பொருள்கள் தொடர்ந்து காணிக்கையாக வந்து கொண்டிருக்கின்றன. இவற்றை ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bell and incense stick send to ayodhi ramar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->