அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் ஆவாரா கமலா ஹாரிஸ்?...உலகமே உற்று நோக்கும் அதிபர் தேர்தல் தொடங்கியது!...யாருக்கு வெள்ளை மாளிகை? - Seithipunal
Seithipunal


உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் சற்று நிமிடத்திற்கு முன்னர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில்,  ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் காலம் காண்கின்றனர்.

அங்கு ஒட்டு மொத்தமாக 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 7 கோடிக்கும் அதிகமானோர் முன்கூட்டியே தங்கள் வாக்கினை செலுத்தி உள்ளனர்.

மேலும் , கமலா ஹாரிஸ் இ-மெயில் மூலம் தனது வாக்கினை செலுத்தி உள்ளார்.  இது தவிர எஞ்சிய பொதுமக்கள் அமெரிக்காவில் உள்ள  50 மாகாணங்களில் இன்று வாக்களிக்க உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

தொடர்ந்து, இழுபறி நீடிக்காவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். இந்த தேர்தலில் 9 இந்திய வம்சாவளி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 43 மாநிலங்களின் வாக்குகளில் பெரிய வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அரிசோனா, ஜார்ஜியா, வட கரோலினா உள்ளிட்ட 7 மாநிலங்களின் ஆதரவு யாருக்கு என்பதே வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Is kamala harris the first woman president in the united states he world is watching the presidential election who has the white house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->