வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!...கந்த சஷ்டி திருவிழா : 2 நாட்களுக்கு அதிரடி போக்குவரத்து மாற்றம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வரும் 7-ம் தேதி கந்த சஷ்டி திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தெரிவித்துள்ளதாவது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவினை முன்னிட்டு, நாளை மறுநாள்  சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 8-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு பக்தர்களின் போக்குவரத்து வசதிக்காக நாளை மற்றும்  நாளை மறுநாள் ஆகிய இரண்டு  நாட்கள் திருச்செந்தூர் பகுதி வழியாக செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

அதன்படி, திருச்செந்தூர் வழியாக செல்லும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களுக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களை தவிர்த்து ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக, கன்னியாகுமரி  செல்லும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து, தூத்துக்குடியிலிருந்து நெல்லை மார்க்கமாக உவரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளுக்கு செல்லவும்.

அதே போல் கன்னியாகுமரியில் இருந்து வரும் தனியார் வாகனங்கள் திருச்செந்தூர் பாதையை தவிர்த்து நெல்லை மார்க்கமாக உவரி வழியாக வரவேண்டும் என்றும், கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு அனைத்து வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Attention motorists kanda shashti festival 2 days of traffic change


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->