அனுமதியில்லாமல் பாந்திரா கோட்டையை படம் பிடித்த யூ-டியூபர் மீது வழக்கு பதிவு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நகர் பாந்திரா பகுதியில் கடந்த 1640-ஆம் ஆண்டு போர்சுகீசியர்களால் கட்டப்பட்ட பழமையான கோட்டை ஒன்று உள்ளது. போர்ச்சுகீசியர்கள் இந்த கோட்டையை கடல் வழியாக வரும் எதிரிகளைக் கண்காணிப்பதற்காக கட்டினார்கள்.

இந்த நிலையில், இந்தக் கோட்டையை கடந்த வியாழக்கிழமை அன்று மர்ம டிரோன் ஒன்று படம் பிடித்துள்ளது. இதையடுத்து போலீசார் இந்த ட்ரோனை யார் அனுப்பியது? உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா? என்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர். 

அந்த விசாரணையில், இந்த கோட்டையை டிரோன் மூலம் படம் பிடித்தது இருபத்தைந்து வயதுடைய யூ-டியூபர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபருக்கு விளக்கம் கேட்டு நோடீஸ் அனுப்பியிருந்தனர்.

மேலும், போலீசார் பாந்திரா கோட்டையை உரிய அனுமதி இல்லாமல், டிரோன் கேமராவைப் பயன்படுத்தி படம் பிடித்ததாக யூ-டியூபர் மீது வழக்குப்பதிவும் செய்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case regiter against youtuber for filmed Bandra Fort without permission


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->