அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும்... காங்கிரஸ் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசி அவர் "பிரதமர் மோடிக்கும் அதானிக்கும் நீண்ட காலமாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது. அதனால் கருப்பு பணம் ஒழிப்பு குறித்து பேசும் மோடி அரசு அதானியின் முறைகேடுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு முடிவெடுத்துள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி மற்றும் செபி அமைப்பு அதானி குழுமத்தின் மீது விசாரணை நடத்த வேண்டும்.

பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தில் ரூ.74 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. அதேபோன்று அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன்களில் எஸ்பிஐ வங்கியின் பங்களிப்பு 40 சதவீதம். இதன் மூலம் மோடி அரசு நிதி அமைப்பை ஆபத்தான சூழலுக்கு தள்ளி உள்ளது" என குற்றம் சாட்டியுள்ளார்.

அதானி குழுமம் பங்கு முறைகேடு, வரி எய்ப்பு, பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி கடன் பெறுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களில் அதானி குழுமத்தின் மொத்த பங்குகளின் மதிப்பில் ரூ. 4.2 லட்சம் கோடி சரிந்துள்ளது. இதனால் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தில் முதலீடு செய்ததில் ரூ.16 ஆயிரம் கோடியை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress insists adani group should be investigated


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->