காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக சோனியா காந்தி ஒருமானதாக தேர்வு!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக சோனியா காந்தி மீண்டும் பேரழகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்கு பதிவு, ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவு, மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டம் மக்களவைத் தேர்தல் மே 13ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்டும் மக்களவைத் தேர்தல் மே 25ஆம் தேதியும், கடைசி கட்ட ஏழாம் கட்ட மக்களவை தேர்தல் ஜூன் மூன்றாம் தேதியும் நடைபெற்ற முடிந்தது.

 இந்தியாவில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் நான்காம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வென்றெடுத்துள்ளது. நாளை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

 இந்த நிலையில் டெல்லியில் இன்று காலையிலிருந்து நடந்து வரும் காங்கிரஸ் எம்பிகள் கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அஜித் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress party Parliament leader again sonia gandhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->