பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்ட பீகார் முதல்வர்! - Seithipunal
Seithipunal


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது முதல்வர் நிதிஷ் குமார் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்கள் கல்வியின் பங்கு குறித்து கருத்தரிப்பு வீதம் 4.2 சதவீதத்தில் இருந்து 2.9 ஆக குறைந்ததாக பேசினார். 

இது தொடர்பாக பா. ஜனதா தெரிவித்திருப்பதாவது, முதல்வர் நிதிஷ் குமார் சட்டசபையில் பயன்படுத்தி வார்த்தைகள் மிகவும் புண்படுத்தும், அவ மரியாதை, ஆணாதிக்க மனநிலையை குறிக்கிறது. 

இதனால் அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தேசிய மகளிர் ஆணையம், நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. 

இது தொடர்பாக எதிர்ப்பு வலுக்கும் நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்டு உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, 

''நான் தெரிவித்த வார்த்தை பெண்களை அவமரியாதை செய்யும் அர்த்தமில்லை. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy about women Bihar Chief Minister apologies


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->