காஷ்மீரில் நிலவும் சர்ச்சை.....ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது - அமித்ஷா திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் வரும் செப்டம்பர் 18ம் தேதி,  செப்டம்பர் 25ம் தேதி,  அக்டோபர் 1ம் தேதி  என 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சத்தீஷ்காரில் நடந்த நக்சலைட்டுகள் ஒழிப்பு தொடர்பான உயர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்குப்பிறகு உள்துறை அமைச்சர்  அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டுவருவதாக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370க்கு ஜம்மு-காஷ்மீருக்கு இப்போதும், இனி எப்போதும் இடமில்லை என்றும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது என்று கூறினார். 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy in Kashmir Special status will not be brought back to Jammu and Kashmir Amit Shah plans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->