CUET PG 2023 : முதுகலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
CUET PG 2023 exam
க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு க்யூட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான முதுகலை பட்டபடிப்புகளுக்கான க்யூட் தேர்வு எழுத கடந்த பிப்ரவரி மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று (ஏப்ரல் 19ம் தேதி) மாலை 5 மணி வரை cuet.nta.nic.in இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதில், ஏதேனும் புகார்கள் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண்கள் அல்லது cuet-pg@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்புகொண்டுவிளக்கம் பெறலாம். கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.