ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்..முதலமைச்சருக்கு திமுக MLA கோரிக்கை! - Seithipunal
Seithipunal


கட்டாய ஹெல்மெட் சட்டம் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்றும்  ஹெல்மெட் அணிவதில் இருந்து நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என திமுக இளைஞரணி அமைப்பாளரும் முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்  முதலமைச்சருக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.

 புதுச்சேரி தி.மு.க மாநில இளைஞரணி அமைப்பாளரும், முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான  சம்பத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:புதுச்சேரியில் நாளை முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. எந்த ஒரு சட்டமும் அமல்படுத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பும் வேண்டும். 

ஹெல்மெட் அணியாததால் சாலை விபத்துகளில் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் ஆனால் அதே நேரம் ஹெல்மெட் அணிவதால் பொதுமக்களுக்கு ஏற்படும்  அசௌகருத்தையும் பொதுமக்களின் கருத்தையும் மதிப்பளிக்க வேண்டும். நகரப் பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் விரைவில் கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் பார்க்க வேண்டும். பொதுமக்களிடம் போதுமான விழிப்புனர்வு ஏற்படும் வரை கட்டாய ஹெல்மெட் சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும். முதல் கட்டமாக கட்டாய ஹெல்மெட் சட்டத்தை கொம்யூன்  பஞ்சாயத்துகளில் இருந்து தொடங்க வேண்டும். புதுச்சேரியில் அரியாங்குப்பம், 

நெட்டப்பாக்கம் , பாகூர், மன்னாடிபட்டு மற்றும் வில்லியனூர் ஆகிய ஐந்து கோம்யூன் பஞ்சாயத்துகளும் புதுச்சேரி மற்றும் உழவர்கரை ஆகிய இரண்டு நகராட்சிகளும் உள்ளன. நகராட்சி பகுதிகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக திருக்கனூர் பகுதியில் இருந்து ஒருவர் புதுவைக்கு வருகின்றார் எனில் அவரது பயண தூரம் அதிகம். அவர் நகராட்சி பகுதியில் வந்துவிட்டது என்பதற்காக  தான் அணிந்திருந்த ஹெல்மட்டை கழட்டி வைக்கப் போவதில்லை. அதே போல் புதுவையில் இருந்து ஒருவர் திருக்கனூர் செல்லும் பொழுது  நகராட்சி எல்லை வரை தான் வைத்திருக்கும் ஹெல்மட்டை கையில் வைத்திருத்து  கொம்யூண் பஞ்சாயத்து எல்லை ஆரம்பித்தவுடன் அணியப் போவதில்லை. பயணம் தொடங்கிய இடத்தில் இருந்தே ஹெல்மட்டை அணிந்து செல்வார்.

 இதன் மூலம் படிப்படியாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற பழக்கம் பொதுமக்களுக்கு ஏற்படும் அவர்களும் ஏற்றுக் கொள்வார்கள். எனவே முதல் கட்டமாக நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க தேவையான நடவடிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என புதுச்சேரி தி.மு.க மாநில இளைஞரணி அமைப்பாளரும், முதலியார் பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான  சம்பத் கோரிக்கைவிடுத்துள்ளார். 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exemption from wearing helmets should be given DMK MLA appeals to CM


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->