அமிதாப்பச்சன் போட்டோவை அனுமதியில்லாமல் பயன்படுத்தக் கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
delli highcourt order for Amitabh Bachchan photo not use in without permission
ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் தனது 80 வயதிலும் சினிமா உள்ளிட்ட தொலைக்காட்சி படப்பிடிப்புகளில் மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்று வருகிறார்.
இவர் மும்பையில் மிகவும் விரும்பி கட்டிக் கொண்ட "அழகிய ஜல்சா" வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது ரசிகர்களை சந்தித்து பேசி, அவர்களோடு சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொள்கிறார்.
இந்நிலையில் இவர், தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடைவிதிக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி நவீன் சாவ்லா இன்று விசாரணை செய்தார்.
அப்போது, நடிகர் அமிதாப் பச்சன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், "நடிகர் அமிதாப் பச்சன் பெயரில் லாட்டரி மோசடி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அமிதாப் பச்சனின் புகைப்படங்களை பயன்படுத்தி துணி மற்றும் சுவரொட்டிகள் தயாரித்து வருகின்றனர்.
ஆகவே, அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள் மற்றும் குரல் ஆகியவற்றை முன் அனுமதியின்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமிதாப் பச்சன் பெயர், போட்டோ மற்றும் குரலை முன் அனுமதியில்லாமல் பிறர் பயன்படுத்துவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
English Summary
delli highcourt order for Amitabh Bachchan photo not use in without permission