உ.பியில் கொடூரம் - இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை - 5 பேர் கைது.!
five peoples arrested for harassment in uttar pradesh
பிஜ்னோர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் ஐந்து பேர் கொண்ட கும்பலால் கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த 9-ந்தேதி அதே கிராமத்தை சேர்ந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இதனை வெளியே யாரிடமாவது சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதுடன், கொலை செய்துவிடுவோம் என்றும் அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அந்த இளம்பெண், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளான 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
five peoples arrested for harassment in uttar pradesh