இந்திய பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு.. பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் உறுதி! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்களது நீர்நிலைககள் உள்பட எந்த பகுதியையும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இலங்கை உறுதி அளித்துள்ளது.

இந்தியா வந்த இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயக இன்று  இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் எங்களது நீர்நிலைககள் உள்பட எந்த பகுதியையும் பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்காது என இலங்கை உறுதி அளித்துள்ளது.

இந்தியா- சீனா இடையில் ஏற்கனவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் இந்தியா அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது.

இந்தியாவை குறிவைத்து சீனா "Mission Indian Ocean" என்பதை குறிவைத்துள்ளது. இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் இந்திய பெருங்கடலில் இலங்கை பகுதியில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது காணப்பட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இலங்கையுடன் நட்புணர்வை வளர்த்துக் கொள்ள சீனா அதிக அளவில் உடன் கொடுத்தது. குறிப்பிட்ட அளவிலான கடனை பெற்ற இலங்கையால் சீனாவுக்கு கடனை திருப்பி அடைக்க முயடிவில்லை. இதனால் சீனா இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. இதனால் சீனாவின் அதிநவீன கப்பல்கள் வரத் தொடங்கியது.

இலங்கை இந்தியாவுக்கு மிக அருகில் உள்ளதால், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

2022 ஆகஸ்ட் மாதம் இந்தியா இலங்கையிடம் இது தொடர்பாக தனது கவலையை தெரிவித்தது. இதனால் இலங்கை சீனாவிடம் இது போன்ற செயல்களை நிறுத்த வலியுறுத்தியது. என்றபோதிலும் பின்னர் சீன கப்பல்களை நிறுத்துவதற்கு அனுமதி அளித்தது. அதில் இருந்து சீனா இந்திய பெருங்கடலில் ஆய்வு மேற்கொள்வதும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் (Hambantota Port) கப்பல்களை நிறுத்தி வருகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்ட இலங்கைக்கு சீனா 1.7 பில்லியன் டாலர் கடன் வழங்கியிருந்தது. அதற்கு வருடம் 100 மில்லியன் டாலர் திரும்ப வழங்க முடியாத நிலையில், 99 வருட ஒப்பந்தத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எடுத்துக் கொண்டது. 2010-ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணிகள் முடிவடைந்தது.

இந்தியாவுடனான இன்றைய ஒப்பந்தத்தில் இலங்கை அதன் நீர்நிலைகள் உட்பட இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Full cooperation for India's securitySri Lankan President confirms to PM Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->