6 மரங்களை வெட்ட தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


6 மரங்களை வெட்ட தடை - மாநில அரசு அதிரடி உத்தரவு.!

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மரக்கட்டைகள் மற்றும் எரிபொருள் மரக் கடத்தலை தடுக்கும் விதமாக மாமரம் உள்பட ஆறு வகையான மரங்களை வெட்டுவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 

இந்தத் தடையை அறிவித்த அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு , மாமரம், திரியம்பால், டூன், பதம் அல்லது பஜ்ஜா, ரிதா மற்றும் பான் உள்ளிட்ட ஆறு வகை மரங்களின் மரக்கட்டைகள் மற்றும் எரிபொருள் கட்டைகளை மாநிலத்திற்கு வெளியே ஏற்றுமதி செய்ய மொத்த தடை விதிக்கப்படும். 

இந்த நடவடிக்கை சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுப்பதற்கும், பிராந்தியத்தின் பெறுமதிப்புமிக்க வளங்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு வகை மரங்களும் புதிய விதிமுறைகளின் கீழ், பத்து வருட வெட்டும் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. 

இந்த மரங்கள் வெட்டப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் உயிர்வாழ வேண்டும். அப்படி இந்த மரங்களில் எதோ ஒன்றை வெட்ட வேண்டும் என்றால் வனத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே வெட்ட முடியும். 

ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ஐந்து மரங்களை வீட்டு உபயோகத்திற்காக வெட்ட அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட மர வகைகளின் திருத்தப்பட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 13 இனங்களை மட்டுமே அதிகாரிக்கு அறிவித்த பின்னர் வெட்ட அனுமதிக்கப்படுகிறது. மற்ற இனங்களை வெட்டுவதற்கும் வனத்துறை அனுமதி தேவைப்படும்" என்று தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

himachal pradesh govt ban cut six trees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->