வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் இந்தியா; சம்மன் அனுப்பியது வங்கதேசம்..!
India erecting a barbed wire fence on the Bangladesh border
வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 05 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.
இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.
டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்தியா மற்றும் வங்கதேசம் 4,096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 05-வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.
English Summary
India erecting a barbed wire fence on the Bangladesh border