என்னாச்சு.? சந்திரயான்-3 அப்டேட் வெளியிட்ட 15 நிமிடத்தில் நீக்கிய இஸ்ரோ.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14ஆம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3  விண்கலத்தை விண்ணில் செலுத்தி இருந்தது. சுமார் 40 நாட்கள் பயணத்திட்டத்தின் அனுப்பப்பட்ட சந்திராயன்-3ல் இருந்து விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6:03 மணியளவில் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சில மணி நேரத்தில் பிரக்யான் ரோவர் தனது பணியினை தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு விக்ரம் லாண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் தனியே நகர்ந்து தனது ஆய்வினை மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ அறிவித்தது.

இந்த நிலையில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரிந்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் புகைப்படத்தினை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. "நான் உங்களை உளவு பார்க்கிறேன்.!" எனக் குறிப்பிட்டு சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து சந்திரயான்-3 லேண்டரை சந்திரயான்-2ன் ஆர்பிட்டரின் உயர்தெளிவுத்திறன் கேமரா (OHRC) மூலம் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த புகைப்படம் வெளியான 15 நிமிடத்தில் உடனடியாக இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கி உள்ளது. எனினும் அந்த பதிவில் ஸ்க்ரீன்ஷாட் தற்பொழுது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இஸ்ரோ தனது பதிவை நீக்கியது குறித்து சமூக வலைதளங்களில் இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ISRO deleted recent post about Chandrayaan3 in social media


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->