கேரளாவில் 13 சிறுமியை 60 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்! அதிரவைக்கும் பின்னணி!
Kerala Abuse case
நானும் முழுவதும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக கேரள மாநிலம் மற்றும் பத்தனம்திட்டாவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு, 60 பேரால் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல் கட்டமாக நான்கு முதல் தகவல் அறிக்கை முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ள போலீசார், ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் மாணவியின் உடற்கல்வி பயிற்சியாளர், மாணவியின் பள்ளி வகுப்பு தோழர்கள் என 60க்கும் மேற்பட்டோர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் 18 வயது நிரம்பிய நிலையில், அவர் 13 வயதிலிருந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொடர் பாலியல் வன்கொடுமைகளால் மாணவியின் மனநலம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தன்னிடம் யார் யாரெல்லாம் அத்து மீறினார்களோ அவர்களின் செல்போன் எண்களை தனது தந்தையின் மொபைலில் சிறுமி பகிர்ந்து உள்ளதாகவும், சுமார் 40 செல்போன் எண்களை கைப்பற்றியுள்ள போலீசார் அந்த குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.