சாதி பெருமை பேசும் புத்தகம்! திமுக கூட்டணி கட்சி தலைவர் செய்த சம்பவம்!
laalu say about community vise census
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பாஜக தலைமையிலான மத்திய அரசு வெறுப்புடன் பார்ப்பதாக, திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.
பீகார் : பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் 'சாதிப் பெருமை' என்ற சாதிப் பெருமை பேசும் புத்தகத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லாலு பிரசாத் யாதவ் தெரிவிக்கையில், "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நாங்கள் நடத்தினால், அதனை மத்திய அரசு வெறுப்புணர்ச்சியுடன் பார்க்கிறது.
ஒரு நபரின் சாதி மற்றும் பொருளாதார நிலை குறித்து தெரியாமல், எப்படி கொள்கைகளை உருவாக்க முடியும்?
கடந்த ஜனவரி மாதம் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இந்த கணக்கெடுப்பின் உள்நோக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பி, அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் பல மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆனால். உயர்நீதிமன்றம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்றமும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கூடாது என்பதற்கான சரியான காரணத்தை சுட்டிக்காட்டாதவரை, அதற்கு தடை விதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது" என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்தார்.
English Summary
laalu say about community vise census