அதிர்ச்சி !...நடிகர் ஷாருக் கானுக்கு கொலை மிரட்டல்! - Seithipunal
Seithipunal


நடிகர் ஷாருக் கானிடம் ரூ. 50 லட்சம் கேட்டு அடையாளம் தெரியாத நபர்  கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம்,லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலான மாபியா கும்பல் தன்னையும் தனது குடும்பத்தினரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் தனது இல்லத்தில் துப்பாக்கி சூடு நடத்தியதாக நடப்பு  ஆண்டின் தொடக்கத்தில் நடிகர் சல்மான் கான் போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

இதே போல், கடந்த ஜனவரி மாதத்தில், அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் போலி அடையாளங்களைப் பயன்படுத்தி பன்வாலில் உள்ள தனது பண்ணை வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக சல்மான் கான் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஷாருக் கானிடம் ரூ. 50 லட்சம் கேட்டு அடையாளம் தெரியாத நபர்  கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இது குறித்து மும்பை பந்த்ரா காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், சைபர் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shock actor shah rukh khan receives death threat


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->