அமரன் படத்திற்கு திமுக கூட்டணி கட்சி எதிர்ப்பு! முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? பாஜக தரப்பில் பதிலடி! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'அமரன்' திரைப்படம் குறித்து கடும் விமர்சனம் செய்திருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா அவர்கள். மதத்தின் பெயரால்  இந்தியாவை துண்டாட துடிக்கும் சில அடிப்படைவாதிகளின் எண்ணங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் தகர்ப்பதே ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரின் கனவு. 

அப்படத்தில் பல முஸ்லிம் இளைஞர்களை தேச பக்தி கொண்ட ராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தியுள்ளதோடு, பல முஸ்லிம் குடும்பங்களை பயங்கரவாதிகளுக்கு எதிரானவர்களாக சித்தரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தில் நடித்துள்ள பெரும்பாலான கதாபாத்திரங்களின் ஜாதி, மத, மொழி, மாநில அடையாளங்களை இத்திரைப்படம்  சுட்டிக்காட்டியுள்ள அதே வேளையில், கதாநாயகனின் அடையாளத்தை மட்டும் மறந்து விட்டது அல்லது மறைத்து விட்டது என்பதை பலர் விமர்சனமாக முன் வைத்துள்ள போதிலும், ஜாதி, மதம், இனம், மொழி இவற்றையெல்லாம் தாண்டி நாடே பெரியது என்கிற கோட்பாட்டை, உண்மையை உணர்ந்து அச்சமுதாயம் கடந்து சென்று விட்ட நிலையில்,  ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையே தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது இத்திரைப்படம் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்பதற்கேற்ப ஜவாஹிருல்லா அவர்கள் கூறுவது வேடிக்கையாக, வினோதமாக இருக்கிறது.

மதத்தின் பெயரால் தான் காஷ்மீரில் தீவிரவாத, பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன என்பது மறுக்க முடியாத, மறைக்க முடியாத உண்மை. எப்படி இந்த திரைப்படத்தில் நடித்துள்ள இஸ்லாமிய கதாபாத்திரங்கள் உண்மையை உணர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்களோ, அதே நிலைப்பாட்டை தான் ஒவ்வொரு இந்திய இஸ்லாமியரும் பின்பற்றுவார்கள்.

இத்திரைப்படத்தை கண்டித்து சில இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்போவதாக செய்தித் தாள்களில் படிக்க நேர்ந்தது. அப்படி ஒரு தவறை எந்த இயக்கமும் செய்யாது என்று நம்புகிறேன். மீறி போராட்டங்கள் நடைபெறுமானால், மத உணர்வுகளை தூண்டி விட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க துடிக்கும் அமைப்புகளாக  கருதப்பட்டு இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்" என்று நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Alliance party condemn to Amaran movie BJP Reply


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->