பெண்களே... உங்க கணவர்களை வீட்டிலேயே மது குடிக்க சொல்லுங்கள்! சர்ச்சையில் சிக்கிய ம.பி அமைச்சர்! - Seithipunal
Seithipunal


பெண்கள் தங்களின் கணவர்களிடம் மது வாங்கி வீட்டில் குடிக்குமாறு அறிவுறுத்த வேண்டுமென்று, மத்திய பிரதேசம் மாநில அமைச்சர் நாராயண் சிங் குஷ்வாஹாவின் மலிவான பேச்சு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில அமைச்சரின் இந்த மது குறித்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதே சமயத்தில் அவர் சொல்ல வந்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், ஆளுங்கட்சியினர் சார்பில் பதில் விளக்கம் கொடுக்க விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது. 

மதுவை வீட்டில் வாங்கி குடிக்க வேண்டும் என்று தங்களது கணவரிடம் பெண்கள் அறிவுறுத்தினால், எப்படி வீட்டில் குடிக்க முடியும் என்ற அவமானத்தில், நாளடைவில் மது குடிக்கும் கணவர்கள் குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள் என்ற அர்த்தத்தில் அமைச்சர் கூறியதாக பாஜக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

உண்மையில் அமைச்சர் பேசிதாவது, வெளியில் செல்லும் கணவன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தால், அவரிடம் வீட்டில் இருக்கும் மனைவி இனி மது குடிக்க வேண்டும் என்றால், வீட்டில் வைத்து தான் குடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துங்கள். அப்போதுதான் வீட்டில், பெண்கள் குழந்தைகள் முன்னிலையில் எப்படி அவர்களால் குடிக்க முடியும்? என்று அவமானமாக கருதி அவர்கள் நாளடைவில் குடிப்பழக்கத்தை நிறுத்தி விடுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அமைச்சரின் இந்த பேச்சு பெண்கள் தங்களது கணவரிடம் மதுவை வீட்டில் வாங்கி குடிக்குமாறு அமைச்சர் அறிவுருத்தியதாக சமூக வலைத்தளம் உள்ளிட்ட தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், அமைச்சர் இந்த மது விவகாரத்தில் பேசும் போது, மது குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களுக்கு வீட்டில் உணவு அளிக்க வேண்டாம் என்று பெண்களிடம் அவர் கோரிக்கையும் வைத்திருந்தார். இது குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. 

ஆனால் அவர் பேசியதை சிலர் வேண்டுமென்றே தவறாக சித்தரித்து பரப்புகின்றனர் என்று ஆளும் கட்சியின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சியினர் தரப்பில், "வேண்டுமானால் நீங்கள் மாநிலத்தில் மதுவுக்கு தடை விதித்து விடலாமே.. எந்த சர்ச்சையும் எழாது. உங்கள் பேச்சு அவதூறாக பரப்பப்படாது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். பெண்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். கணவன்மார்களும் மது பழக்கத்திற்கு அடிமையாக போவதில்லை என்று பதிலடி கொடுத்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Minister Speech About Liquor


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->