அரசு வீட்டை காலி செய்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.!
Mahua Moitra vacates official bungalow
மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாஹுவா மொய்த்ரா, கிருஷ்ணா நகர் எம்.பி. ஆக இருந்தார்.
இவர் மீது, அந்தாணி குழுமத்தையும் பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்பு படுத்தி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக பாராளுமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தி தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்தது.
இதனை அடுத்து மாஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டதால் புதுடெல்லியில் உள்ள அரசு வீட்டை காலி செய்ய மக்களவைச் செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனை தொடர்ந்து அரசு எஸ்டேட் இயக்குனராகமும் நோட்டீஸ் அனுப்பியதால் மாஹுவா மொய்த்ரா இதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு தள்ளுபடி செய்த நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மாஹுவா மொய்த்ரா இன்று காலி செய்தார்.
English Summary
Mahua Moitra vacates official bungalow