ஜோஷிமத்தில் நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு வந்த மலையாள பாதிரியார் விபத்தில் பலி.! - Seithipunal
Seithipunal


ஜோஷிமத்தில் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு வந்த மலையாள பாதிரியார் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் பாதிரியார் மெல்வின் ஆபிரிகாம்(37). இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பேரிடரால் பாதிப்படைந்த ஜோஷிமத் நகர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது கடும் பனிப்பொழிவு காரணமாக கொக்காவில் கார் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு பின்பு மெல்வின் ஆபிரிகாம் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு பிஜ்னோர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள புனித ஜோசப் பேராலயத்தில் திங்கள்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Malayalam priest died in an accident after distributing relief goods in Joshimath


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->