மேற்கு வங்கத்தில் பரபரப்பு! பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட பயிற்சி மருத்துவர்!
Mamata Banerjee said that the students are protesting because of the killing of the training doctor so there is nothing to hide
பயிற்சி டாக்டர் கொலையால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அதனால் மறைக்க எதுவும் இல்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரித்து வந்த மருத்துவ மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொலை செய்யப்பட்ட மாணவி பிரேத பரிசோதனையில் கொலை செய்வதற்கு முன்பாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில், பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்வி மாணவர்கள் பயிற்சி மருத்துவரின் இறப்புக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது, பயிற்சி மருத்துவர் கொலையில் மறைக்க எதுவும் இல்லை. இந்த வழக்கில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் விரைவு நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தப்படுவார்.
நாங்கள் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கேட்போம். ஆனால் போராடும் மாணவர்கள் வேறு அமைப்புகளின் விசாரணை வேண்டும் என்று விரும்பினால் நாங்கள் அதற்கு எதிராக இருக்க மாட்டோம்.
சிபிஐ விசாரணை கூறினால் அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நாங்கள் எதையும் மறைக்கவில்லை.
குறைபாடாக இருப்பதாக என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee said that the students are protesting because of the killing of the training doctor so there is nothing to hide