கொழுந்து விட்டு எரிந்த கடை - சிசிடிவி காட்சியால் சிக்கிய தொழிலாளி.!
man arrested for fire to shop in maharastra nakpur
கொழுந்து விட்டு எரிந்த கடை - சிசிடிவி காட்சியால் சிக்கிய தொழிலாளி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் பெயிண்ட் கடை நடத்தி வருபவர் புர்கான் தாவூத் அஜீஸ் தாவூத். இவரது கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டு ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார், தாவூத் கடையின் பக்கத்து கடையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், தாவூத் கடையில் பணிபுரிந்து வந்த ரவுனக் பாலிவால் என்பவர் கடையின் ஷட்டரின் இடைவெளி வழியாக பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் அந்த சிசிடிவி காட்சி அடிப்படையில் பாலிவாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், "தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்கவே கடைக்கு தீ வைத்ததாக தெரிவித்துள்ளார்.
English Summary
man arrested for fire to shop in maharastra nakpur