தமிழகத்தையும் கர்நாடகாவையும் இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டம்! நிறைவேற்ற கிருஷ்ணகிரி எம்.பி.கோரிக்கை.!
Metro Train between Tamilnadu and Karnataka
கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழகம் வரை நீட்டிக்க வேண்டும் என கர்நாடக முதல்வரிடம் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லகுமார் நேரில் கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ்பொம்மையை நேரில் சந்தித்த கிருஷ்ணகிரி எம்.பி. செல்லகுமார், கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை செயல்படுத்தப்படும் மெட்ரோ சேவையை அத்திப்பள்ளி வழியாக தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மேலும் இந்த திட்டம் தமிழக கர்நாடக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் இதன் மூலம் பெங்களூர் மெட்ரோ நிறுவனத்துக்கும் நல்ல வருவாய் கிடைக்கும் எனவும் மனுவில் குறுப்பிட்டுள்ளார்.
இரு மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரயில் சேவை என்பது புதியதல்ல எனவும், ஏற்கனவே உத்தரபிரதேசம், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இது நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது, ஆகவே மக்கள் நலன் கருதி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குறுப்பிட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் இது நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Metro Train between Tamilnadu and Karnataka