டெல்லி : திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய இளம்பெண்.! பிரீசரில் சடலமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள நஜாப்கார் நகர் மித்ராவன் கிராமப்புறத்தில் உணவு விடுதி ஒன்று அமைந்து உள்ளது. இந்த விடுதியில் உள்ள பிரீசரில், சுமார் 25 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "இந்த சம்பவம் தொடர்பாக மித்ராவன் கிராமத்தில் வசிக்கும் உணவு விடுதியின் உரிமையாளரான சாஹில் கெலாட் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து உள்ளோம். 

இதையடுத்து, அவரிடம் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண்ணுடன் சாஹில் உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே, அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவு செய்துள்ளார். 

இதையறிந்த அந்த இளம்பெண் சாஹிலிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அவர் அந்த  பெண்ணை கொலை செய்து உடலை பிரீசரில் மறைத்து வைத்து உள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றது தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near delhi man killed his girlfriend hide her body in freezer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->