நீட் தேர்வு சர்ச்சை: நீட் விவகாரத்தில் மாணவர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிப்பேன் - ராகுல்காந்தி!!
Neet exam result issue Raghul Gandhi question
அரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் அதிகபட்சம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குறிய வகையில் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். ஆனால் வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறதாக காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், அந்த தேர்வில் எப்போதும் இல்லாத அளவுக்கு தேசிய அளவில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்திருந்தார்கள். அரியனா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720/720 மதிபெண்கள் எடுத்திருப்பது நாடு முழுவதும் பேரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது, மோடி அரசு பதவி ஏற்கும் முன்பே நீட் தேர்வு நடந்த முறைகேடு 20 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை நிலைகுலையவைத்துள்ளதாக கூறியுள்ளார்.
ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். பல மாணவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.ஆனால் வினாத்தாள் லீக் என்பதை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. வினாத்தாள் லீக் போன்ற முறைகேடுகளை தடுக்க காங்கிரஸ் திறந்த திட்டங்களை முன்வைத்தது. மாணவர்களுக்காக நாடாளுமன்றத்தில் நான் குரல் எழுப்புவேன் என்று உறுதி அளிக்கிறேன். இண்டியா கூட்டணி மீது இளைஞர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களின் குரல் நெறியப்படுவதை இண்டியா கூட்டணி அனுமதிக்காது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
English Summary
Neet exam result issue Raghul Gandhi question