20 ஆயிரம் பள்ளிகள் மூடல்.! 1.5 லட்சம் ஆசிரியர்கள் குறைவு.!
New National Education Policy central government report
புதிய தேசிய கல்வி கொள்கைக்காக திரட்டிய பள்ளிக்கல்வி தொடர்பான புள்ளிவிவரங்களுடன் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியிட்டிருப்பதாவது, 2020-2021 ம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுவதும் 15 லட்சத்து 9 ஆயிரம் பள்ளிகள் இருந்தன.
ஆனால், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, பள்ளிகள் 14 லட்சத்து 89 ஆயிரமாக குறைந்து விட்டது. அதாவது, பள்ளிகள் எண்ணிக்கை இருபதாயிரத்திற்கும் மேல் குறைந்துள்ளது. தனியார் பள்ளிகள் சில மூடப்பட்டதால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
2020-2021 ஆம் கல்வி ஆண்டின் தொடக்கத்தில், சுமார் 97 லட்சத்து 87 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். ஆனால், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கும்போது, அவர்கள் எண்ணிக்கை 95 லட்சத்து 7 ஆயிரமாக குறைந்து உள்ளது.அதாவது, 1.95 சதவீத ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் 44.85 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக, 34 சதவீத பள்ளிகளில் மட்டுமே இணைய இணைப்பு உள்ளது. அதேபோல் 27 சதவீத பள்ளிகளில் மட்டுமே மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக தனி கழிப்பறை வசதி உள்ளது. அதிலும், 49 சதவீத பள்ளிகளில் மட்டுமே குழந்தைகளுக்கு செல்வதற்கு ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுப்பாதை உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் மாணவர் சேர்க்கை தள்ளிப்போடப்பட்டதால், நலிந்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் சேர்வது குறைந்து விட்டது. குறிப்பாக, 2020-2021 கல்வி ஆண்டில் 19 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
New National Education Policy central government report