லாட்டரியில் 1 கோடி வென்ற வடமாநிலத் தொழிலாளி.!! போலீசாரிடம் கதறி அழுத சம்பவம் - நடந்தது என்ன?
north state youth won one crore price money in kerala lottery
லாட்டரியில் 1 கோடி வென்ற வடமாநிலத் தொழிலாளி.!! போலீசாரிடம் கதறி அழுத சம்பவம் - நடந்தது என்ன?
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரளா மாநிலத்தில் அரசே இந்த லாட்டரிச்சீட்டு விற்பனை செய்கிறது. இந்த லாட்டரி சீட்டை ஏரளாமானோர் வாங்கி அதில் விழும் பரிசுத் தொகையின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த பிர்சு என்ற வாலிபர் லாட்டரி சீட் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சீட்டில் அவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு விழுந்தது. ஆனால், இந்த பரிசுத் தொகையில் வருமான வரிப்பிடித்தம் போக, அந்த நபருக்கு அறுபத்தைந்து லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
இந்த பணத்தை வாங்க வேண்டுமென்றால் கேரள அரசின் லாட்டரி அசோசியேசனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் பிர்சுவும், அவரது நண்பர்களும் அசோஸியேஷனுக்கு செல்லாமல் காவல் நிலையத்திற்கு கும்பலாக வந்தனர். அப்போது பிர்சு,"எனக்கு லாட்டரிச் சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பலரும் இந்த லாட்டரிச் சீட்டை என்னிடம் இருந்து அபகரிக்க முயல்கின்றனர். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்”என்றுக் கூறி கதறி அழுதார்.
1 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் கூட வடமாநிலத் தொழிலாளி உயிருக்கு ஆபத்து என்று அழுது கொண்டே காவல் நிலையத்திற்கு ஓடிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து போலீஸார் பிரசுவுக்கு ஆறுதல் சொல்லி, பிரச்சினை எதாவது வந்தால் தங்களை உடனே அணுகுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
English Summary
north state youth won one crore price money in kerala lottery