ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் - ஒருவரின் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


பெஞ்சல் புயலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி, ஆற்றங்கரை பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால், நீர்நிலைகளில் குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் ஆபத்தை உணராமல் பல பகுதிகளில் பொதுமக்கள் மீன்பிடித்தும், ஆற்றில் இறங்கி குளித்தும் வருகின்றனர். 

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த இரண்டு 12-ம் வகுப்பு மாணவிகள் ஆற்றில் இறங்கி குளித்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

உடனே அப்பகுதி மக்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு நர்மதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நர்மதா உயிரிழந்தார். இதையடுத்து அணுஸ்ரீயின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர், போலீசார் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one student body rescue from river in vilupuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->