உணவக உரிமையாளர்களின் பெயரை கேட்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் - பிரியங்கா காந்தி!
owner name for food is an attack on democracy Priyanka Gandhi
உணவக உரிமையாளர்களின் பெயரைகளை உத்தரபிரதேச அரசு கேட்பதாக சர்ச்சை எழுந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்திர பிரதேச மாநிலத்தின் கன்வர் யாத்திரா செல்லும் வழியில் உள்ள உணவகங்களில் உணவு விற்பனை செய்பவரின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என முசாபர் நகர் காவல் துறை உத்தரவிட்டு உள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச அரசியல் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களின் பாதிக்கும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவை கண்டித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.இதுகுறித்து அவரது சமூக வலைதளப் பக்கமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பது, அரசியல் அமைப்பு மனிதர்களிடையே ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கிறது.
ஆனால், உத்தரபிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு நமது அரசியல் அமைப்பு நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் ஆகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் மற்றும் அதனை பிறப்பித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
English Summary
owner name for food is an attack on democracy Priyanka Gandhi