பாகிஸ்தானில் சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் விடுதலை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 198 பேரை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

இந்திய கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடித்ததாக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் 651 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் 631 மீனவர்களின் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்புவதற்காக காத்திருக்கின்றனர். இதனிடைய கடந்த சில நாட்களுக்கு முன்பு கராச்சி சிறையில் இருந்த இந்திய மீனவர் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதனையடுத்து இன்று 198 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.

அந்த வகையில் கராச்சி சிறையில் இருந்து 198 இந்திய மீனவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். முதலில் அவர்கள் லாகூருக்கு அனுப்பப்பட்டனர் அதன் பின்னர் வாகா எல்லையில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan govt release 198 Indian fishermen


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->