ஒரு ஏக்கர் நிலத்தில் 2500 கிலோ அரிசியில் உருவான நடிகர் சோனு சூட் உருவப்படம்.!
peoples make sonusuit image in 2500 kg rice
ஒரு ஏக்கர் நிலத்தில் 2500 கிலோ அரிசியில் உருவான நடிகர் சோனு சூட் உருவப்படம்.!
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கொரோனா தொற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அப்போது பாலிவுட் நடிகர் சோனு சூட் மக்களுக்கு நிதி உதவி, பேருந்து வசதி உள்பட பல உதவிகளை வழங்கி, பெரும் பங்காற்றினார்.
![](https://img.seithipunal.com/media/sonu suit-lpb7l.png)
இதன் மூலம் பிரபலமடைந்த சோனு சூட் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ தனியாக அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல், திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு வருபவர்களுக்கு உதவுவதற்கு தனி மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சோனு சூட் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை தெரிவிக்கும் வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தேவாஸ் பகுதியில், ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500 கிலோ அரிசியை பயன்படுத்தி சோனு சூட் உருவத்தை ரசிகர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வரைந்துள்ளனர்.
![](https://img.seithipunal.com/media/sonu suit 2-3vtde.png)
இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்து மிகவும் நெகிழ்ந்து போன நடிகர் சோனு சூட் புகைப்படத்தை வரைந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சில நெட்டிசன்கள் இது தேவையில்லாத வேலை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த கருத்துக்கு மாறாக இந்த அரிசி முழுவதும் ஏழ்நிலையில் உள்ள பல குடும்பங்களுக்கு என்.ஜி.ஓ மூலம் அனுப்பிவைக்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவரையில் நெகிழ வைத்துள்ளது.
English Summary
peoples make sonusuit image in 2500 kg rice