பிரதமர் மோடி ஏழைகள் வாயில் இருந்து உணவை பறிக்கிறார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!
PM Modi is taking food from the mouths of the poor Congress alleges
ஏழைகள் பாதிக்கப்படுவதை பற்றி பாஜக கவலைப்படவில்லை பணவீக்க உயர்வுக்கு பிரதமர் மோடியே முழு பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கமான எக்ஸ் சமூகவலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, பணவீக்க மனிதர் மோடியின் சாட்டை மீண்டும் மக்களை பதம் பார்த்துள்ளது. பணவீக்கத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை,எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்த விலை பணம் வீக்க விகிதம் ஓராண்டு கால சாதனையை முறியடித்துள்ளது. உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உழைந்துள்ளது. காய்கரி, சமையல் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பணம் வீக்க உயர்வுக்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. ஆனால் ஏழைகள் பாதிக்கப்படுவதை பற்றி அவர் கவலைப்படுவதில்லை. ஏழைகள் வாயில் இருந்து உணவை பறிப்பதுடன், தனது பணக்காரன் நண்பர்களை சந்தோஷப்படுத்துகிறார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
English Summary
PM Modi is taking food from the mouths of the poor Congress alleges