டெல்லியில் போராடிய மல்யுத்த வீரர்கள்.. குண்டுக்கட்டாக தூக்கிய போலீஸ்..!! - Seithipunal
Seithipunal


மல்யுத்த போட்டிகளில் போட்டியிட்டு பதக்கங்களை வென்ற 7 பெண் மல்யுத்த வீராங்கனைகள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதற்கிடையே டெல்லி காவல் துறையினர் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் நீதி கிடைக்கும் வரை போலீஸ் நிர்வாகம் எவ்வளவு சித்ரவதை செய்தாலும் போராட்டம் நடத்துவோம் என கூறி டெல்லி ஜன்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்ளை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது ஆதரவை தெரிவித்தார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்து வருவதால் அவரது கவனத்தை ஈர்க்கும் நோக்கில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை மல்யுத்த வீரர்கள் முற்றுகையிட முயன்றனர்.

பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள பாஜக ஏம்பி பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பேரணியாக சென்றனர்.

பேரணி சென்றவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன  தொடர்ந்து பேரணி சென்ற மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வண்டியில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police removed the wrestlers who fought in Delhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->