ஜன.1 முதல் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் உயர்வு..!! - Seithipunal
Seithipunal


வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அஞ்சலக சேமிப்பு திட்டத்திற்கு 1.1% வரை வட்டி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அஞ்சலக சேமிப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் நிரந்த வைப்பு தொகை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து சேமிப்பு திட்டத்திற்கான வட்டி விகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி அஞ்சலகங்களில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதி திட்டத்திற்கு 1.1% வட்டி உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட 7.6% வட்டியும் ஜன.1ம் தேதி முதல் 8%ஆக உயர்த்தப்படுகிறது. என்.எஸ்.சி எனப்படும் தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.8%ஆக இருந்த நிலையில் 7%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வடிவத்தில் மாற்றம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Post office savings interest rate hiked from Jan1


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->