தேசிய கல்வி கொள்கை குறித்து.. உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.! - Seithipunal
Seithipunal


தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிரதமர் மோடியின் தலைமை தாங்கினார்.

தேசிய கல்வி கொள்கை அமலாக்கம் குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

எளிதில் கிடைப்பது, சமத்துவம் அனைவரையும் உள்ளடக்குவது, தரம் ஆகியவற்றை உள்ளடக்கி புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் அளவுக்கு அதிகமாக தொழில்நுட்பத்துக்கு உள்ளாவதை தவிர்க்கும் வகையில், ஒரு புதிய, நேரடியாக, ஆன்லைன் வாயிலாக கற்கும் கலப்பு முறையை உருவாக்க வேண்டும்.

மாணவர்களிடம் திறன்களை வளர்ப்பதற்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை பயன்படுத்த வேண்டும்.

பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களை கண்டுபிடித்து மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவது போன்ற சிறப்பு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் முன்னேற்றத்திற்கு அவை வழிகோலும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi consults with top officials on national education policy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->