#Breaking :: தனியார் நிறுவன பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு..!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் தனியார் பால் நிறுவனமான மதர் டேரி தனது பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வர உள்ளது. அதன்படி 64 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொழுப்புச் சத்து நிறைந்த பால் நாளை முதல் 66 ரூபாய்க்கு விற்கப்படும். அதேபோன்று மற்ற பால்களின் விலையிலும் லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 

பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தியதே பால் விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோன்று நுகர்வோர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து பால் மற்றும் பால் பொருட்களின் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இடையே சரியான சமநிலையை ஏற்படுத்தும் விதமாக பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது" என மதர் டேரி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Private milk price hiked by Rs2 per liter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->