2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.!
Rajnaath Singh speech about India improvement
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என பாதுகாத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'டிபன்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் அட்வான்ஸ் டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், உலகம் அதிவேக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்தத் துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்கள் தற்போது உருவாகியுள்ளது.
மாற்றத்திற்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்தத் துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. ஆனால் தற்போது 16,000 கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி 2027 ஆம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும். மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்து நாடாக மாறும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Rajnaath Singh speech about India improvement