ரேஷன் கடைகளில் மோடியின் பேனர் வைக்க முடியாது: முதல்வர் திட்டவட்டம்  - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் கொண்ட அறிவிப்பு பலகைகள் கேரள மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.

இது குறித்து தல்வர் பினராயி விஜயன் பிப்ரவரி 12ம் தேதி கேரள சட்டப் பேரவையில் நடந்த விவாதத்தில் பேசுகையில்,  நீண்ட காலமாக கேரளத்தில் பொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்குவது  உள்ளது. நாடாளுமன்ற  தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இதை தேர்தல் பிரசாரத்தான ஒரு உக்தியாகதான் பார்க்க வேண்டியதாக உள்ளது என்றார். 

முன் எப்போதும் இல்லாத  புதிய உத்தரவை மத்திய அரசு  பிறப்பித்துள்ளது. பிரதமரின் புகைப்படம் கொண்ட விளம்பர பலகைகள்  வைக்க முடியாது என்பதை மத்திய அரசிடம் தெரிவிப்போம். மேலும் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமும் இந்த விவகாரம் குறித்து பேச முயற்சி எடுக்கப்படும் என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ration Shops Can't Display Modi's Banner: CM's Plan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->